கடன் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
2024-09-27 17:32:36

சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான நடவடிக்கைகளைத் தொடர இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்தார்.

இலங்கையின் அரசுத்தலைவராக திஸாநாயக்க நாட்டிற்கு நிகழ்த்திய முதல் உரையில், செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் தேவையான கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட கடன் வழங்குநர்களுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.

இலங்கைக்கு தேவையான கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆதரவைப் பெறுவதில் திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார். அனைத்து குடிமக்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் சட்டத்தை மதித்து, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, ஐக்கிய இலங்கையை  கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

செழிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தேசத்தை உருவாக்க அனைத்து குடிமக்களிடமிருந்தும் கூட்டு முயற்சிக்கு இலங்கை அரசுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார்.