சீன-ஜப்பானிய உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-09-27 19:34:16

இஷிபா ஷிகெரு ஜப்பானின் புதிய தலைமையமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், சீன-ஜப்பானிய உறவின் நீண்டகால சீரான வளர்ச்சி, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது என்றார். ஜப்பான், வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு, அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று, இரு நாடுகளுக்கிடையிலான 4 அரசியல் ஆவணங்களில் வகுக்கப்பட்ட பல்வேறு கோட்பாடுகள் மற்றும் ஒத்தக் கருத்துகளைப் பின்பற்றி, சீனாவின் மீதான ஆக்கப்பூர்வமான கொள்கைகளை மேற்கொண்டு, பரஸ்பர சலுகை கொண்ட நெடுநோக்கு உறவைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, இரு நாட்டுறவு சரியான பாதையில் முன்னேறுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.