© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
செப்டம்பர் 27ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா வளர்ச்சி மாநாடும், 10ஆவது சீனச் சர்வதேச சுற்றுலா முதலீட்டு மாநாடும் சிச்சுவான் மாநிலத்தின் யா ஆன் நகரில் நடைபெற்றன.
மிகுதியான நிலம், பாண்டா கரடியின் ஊர், பாஷு எனும் பண்டைய நாகரிகம், வசதியான சிச்சுவான் ஆகிய சிச்சுவானுடன் தொடர்புடைய 4 சர்வதேச சுற்றுலா அடையாளச் சன்னிங்கள் குறித்து, இம்மாநாட்டில் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும், சிச்சுவான் மாநிலத்தில் பயணிக்க வேண்டிய 25 சுற்றுலா தலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிச்சுவானின் இயற்கை காட்சி மற்றும் பண்பாட்டை அனுபவிக்க உலகம் முழுவதிலுமிருந்து பயணிகள் அழைக்கப்படுகிறார்கள்.
தவிரவும், 2024ஆம் ஆண்டுக்கான சிச்சுவான் மாநிலத்தின் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையில் முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தின் வழிகாட்டி எனும் ஆவணம் இம்மாநாட்டில் வெளியிடப்பட்டது. 26470கோடி யுவான் முதலீட்டில் 242 பண்பாட்டு மற்றும் சுற்றுலா முதலீட்டு திட்டங்கள் இடம்பெறுகின்றன.