© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சி.ஜி.டி.என்.தொலைகாட்சி நிலையமும், சீன ரென்மின் பல்கலைக்கழகமும், சீனா மீதான ஆதரவு பற்றிய 2ஆவது உலகளாவிய கருத்து கணிப்பு மேற்கொண்டன. தரவுகளின்படி, கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டோருள், சீனாவுக்கு ஆதரவு அளித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து உள்ளது. குறிப்பாக, பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு மற்றும் சர்வதேச செல்வாக்கு ஆகிய துறைகளில் சீனா அதிகமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. உலகளாவிய தெற்கு( "Global South" )நாடுகளில் உள்ள கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டோரிலும் 34 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களிலும் பெரும்பாலானோர், சீன நவீனமயமாக்கத்தின் கருத்துக்களையும் சாதனைகளையும் அங்கீகரித்துள்ளனர்.
சீனாவின் புகழ் பற்றிய கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களின் ஆதரவும் அங்கீகாரமும் கடந்த ஆண்டை விட குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளன. பதிலளித்தவர்களில் 92 சதவீதம் பேர், சீனா ஒரு முக்கியமான நாடாக இருக்கிறது என்று ஒப்புக்கொண்டனர், இது கடந்த ஆண்டை விட 1.4 சதவீத புள்ளிகள் சற்று உயர்ந்துள்ளது; 89 சதவீதம் பேர், சீனா ஒரு வெற்றிகரமான நாடாகக் கருதுகின்றனர். இது, 4.8 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு ஆகும்; மற்றும் 77.8 சதவீதம் பேர் சீனாவை மரியாதைக்குரிய நாடாக கருதுகின்றனர், முந்தைய ஆண்டை விட இது 1.3 சதவீத புள்ளிகள் அதிகம்.