வலுவான உற்பத்தித் துறையை உருவாக்குவதில் தொழில்துறை தொழிலாளர்களின் பங்களிப்புக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்
2024-09-28 16:40:57

வலுவான உற்பத்தித் துறையை உருவாக்குவதிலும் வடகிழக்கு சீனா முழுமையாக புத்துயிர் பெறுவதிலும் தொழிற்துறைத் தொழிலாளர்கள் தங்களது அறிவுத்திறமை மற்றும் வலிமையான பங்களிப்பை மேலும் ஆற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஊக்கமளித்தார்.

அண்மையில், வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் சிசிஹார் நகரில் உள்ள சீன முதல் கனரக தொழில் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு எழுதிய பதில் கடிதத்தில் ஷிச்சின்பிங் இதை தெரிவித்தார்.

உற்பத்தித் தொழில், நாட்டை நிறுவுவது மற்றும் நாட்டை வலிமைப்படுத்துவதற்கான அடிப்படையாக திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.