© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவைத் தொழில் கள ஆய்வு மையமும் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் செப்டம்பர் 30ஆம் நாள் சீன கொள்முதல் மேலாளர் குறியீட்டை வெளியிட்டன.
செப்டம்பர் திங்களில், சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு 49.8 விழுக்காடாகும். இது, கடந்த திங்களில் இருந்ததை விட 0.7 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்ததுள்ளது. உற்பத்தித் துறை அல்லாத வணிக நடவடிக்கை குறியீடு 50 விழுக்காடாகும். இது, கடந்த திங்களில் இருந்ததை விட 0.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்ததுள்ளது. செப்டம்பரில் சீனாவின் ஒட்டுமொத்த கொள்முதல் மேலாளர் 50.4 விழுக்காடாகும். சீனாவின் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் இயக்க நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக வேகமாக விரிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.