சீன உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-09-30 16:23:16

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில் சீன உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 429 கோடியாகும். சுற்றுலா செலவு 4 இலட்சத்து 32 ஆயிரம் கோடி யுவானை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 16.8 மற்றும் 17.1 விழுக்காடு அதிகரித்து, 2019ஆம் ஆண்டின் அதிகபட்ச அளவிற்கு அருகில் உள்ளது என்று செப்டம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் கிடைத்த தகவல் கூறுகின்றது.
பண்பாட்டுச் சுற்றுலா வாரியங்கள், சுற்றுலா மற்றும் பண்பாடு, விளையாட்டு, வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றின் விரைவான ஒருங்கிணைப்பை முன்னேற்றி, பல்வகை, சிறப்பு மற்றும் தரமான உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்தி, “சீனா சுற்றுலா தினம்” மற்றும் “சுற்றுலா சீனா, அருமையான வாழ்க்கை” முதலிய தொடர்ச்சியான நடவடிக்கைகளை நடத்தி, விடுமுறை நாட்கள் உள்ளிட்ட முக்கியமான காலகட்டங்களில் நுகர்வு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் சுற்றுலாவுக்கு சிறந்த சேவைகளை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.