9ஆண்டுகளுக்கு பின் இலங்கையில் முதல் பணவாட்டம் ஏற்பட்டது
2024-10-01 18:34:11

கொழும்புவில் உள்ள நுகர்வோர் விலை குறியீடு மாற்றத்தை அளப்பதன் மூலம் அந்நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் கடந்த செப்டம்பரில் எதிர்மறை எண்ணாக இருக்கின்றது. 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்களுக்குப் பின், இலங்கையில் பணவாட்டம் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது, அதாவது பொருட்களின் விலைகள் சரிந்து வருகின்றன. பணவாட்டத்தின் விகிதம் 0.5 விழுக்காடு ஆகும் என்று இலங்கை மத்திய வங்கி செப்டம்பர் 30ஆம் நாள் தெரிவித்தது.