© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
செப்டம்பர் 26 முதல் 28ஆம் நாள் வரை, நேபாளத்தின் பல பகுதிகளில் தொடர் மழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி, தற்போது வரை 217 பேர் உயிரிழந்தனர். மேலும் 143 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரிஷிராம் திவாரி அக்டோபர் 1-ஆம் நாள் காலையில் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
செப்டம்பர் 30ஆம் நாளிரவு, நேபாளத் தலைமை அமைச்சர் கே.பி. சர்மா ஒலி அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இச்சீற்றங்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 1-ஆம் நாள் முதல் நாடு முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.