அமெரிக்கா: அவசரமாகவும் விரைவாகவும் வட்டியைக் குறைக்கப் போவதில்லை
2024-10-01 18:54:12

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி எதிர்கால நாணயக் கொள்கைக் கூட்டங்களில் தொடர்ந்து வட்டி குறைப்பு இருக்கும். ஆனால், அவசரமாகவும் விரைவாகவும் வட்டியைக் குறைக்க போவதில்லை என்று ஃபெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் ஜெரோம் பாவெல் 30ஆம் நாள் திங்கள்கிழமை தெரிவித்தார்.

எதிர்கால நாணயக் கொள்கையை வகுப்பதில், எந்த திட்டமிடப்பட்ட வழியும் இல்லை என்றும், தரவுகளின் அடிப்படையில், எதிர்கால கொள்கை மற்றும் நடவடிக்கைக்கு வழிகாட்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணயக் கொள்கைக் கூட்டம் வரும் நவம்பர் 6, 7 ஆகிய நாட்களில் நடைபெறும். நவம்பரில் 25 அடிப்படைப் புள்ளிகள் வட்டி குறைக்கப்படும் சாத்தியம் 60 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கும் என்று சந்தையில் கணிக்கப்பட்டுள்ளது.