சீனத் தேசிய தினத்தைக் கொண்டாடும் விருந்தில் சீன அரசுத் தலைவரின் உரை
2024-10-01 19:44:44

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விருந்து கடந்த செப்டம்பர் 30ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் சிறப்பாக நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரைநிகழ்த்தியபோது, கடந்த 75ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், நாட்டின் பல்வேறு இன மக்களின் விடா முயற்சியுடன், பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, சமூகத்தின் நீண்டகால நிதானம் என இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டதாக தெரிவித்தார். சீனாவில் மாபெரும் மாற்றம் காணப்பட்டது, சீன தேசத்தின் மறுமலர்ச்சி பின்நோக்கி செல்ல முடியாத வளர்ச்சி போக்கில் நுழைந்துள்ளது. புதிய காலத்தில், சீன மக்கள் புதிய சாதனைகளைப் படைப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.