செப்டம்பரில் இந்திய பள்ளித் தலைவர்கள் குழுவின் சீனப் பயணம்
2024-10-01 18:37:35

சீன-இந்திய கல்வித் துறையில் மக்கள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்லும் வகையில், இந்தியாவில் உள்ள இடைநிலைப் பள்ளி மற்றும் துவக்க நிலைப் பள்ளித் தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிக் குழு, கடந்த செப்டம்பர் 19 முதல் 27ஆம் நாள் வரை அடுத்தடுத்து, பெய்ஜிங், சோங்சிங், ஷாங்காய் ஆகிய மாநகரிலுள்ள பள்ளிகளுக்கு சென்று பரிமாற்றம் மேற்கொண்டது. சீனக் கல்வித் துறை அமைச்சகத்தின் சீன-வெளிநாட்டு பரிமாற்ற மையத்தின் உதவியுடன், இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. நான்கு மாநகர்களிலுள்ள பள்ளிகளில், திறன் வளர்ப்புக்கான புத்தாக்கம், அறிவியல் கல்வி, டிஜிட்டல் கல்வி ஆகிய கருப்பொருளைக் கொண்டு, சீன-இந்திய பள்ளித் தலைவர்கள் இடையே உரையாடல் நடத்தப்பட்டது.

மேலும், இப்பயணத்தில், இந்த பிரதிநிதிக் குழு உள்ளூரிலுள்ள பண்பாட்டுச் சின்னங்களைப் பார்வையிட்டு, சீனப் பொருளாதாரச் சமூக வளர்ச்சி நிலைமையையும் அறிந்து மேற்கொண்டது.