பிரிட்டனில் கடைசி அனல் மின் நிலையம் மூடப்பட்டது
2024-10-01 16:24:05

பிரிட்டனில் கடைசி அனல் மின் நிலையம் செப்டம்பர் 30ஆம் நாளில் மூடப்பட்டது. அத்துடன், அந்நாட்டில் 140 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து அனல் மின் உற்பத்தி வரலாறும் முடிந்தது. இதனால், ஜி-7 நாடுகளில், பாரம்பரிய முறையில் அனல் மின் உற்பத்தியை நிறுத்திய முதல் நாடாக, பிரிட்டன் மாறியது.

ராட்க்ளிஃப்-ஆன்-சோர்(Ratcliffe-on-Soar) எனும் இந்த அனல் மின் நிலையம், இங்கிலாந்தின் மத்திய பகுதிக்கு சுமார் 60 ஆண்டுகளாக சேவை வழங்கியது. இது, இவ்வாண்டின் கோடைக்காலத்தின் துவக்கத்தில் தனது கடைசி உற்பத்திக்காக இயங்கியது.

திட்டப்படி, கார்பன் இல்லாத தொழில் நுட்பம் மற்றும் எரியாற்றல் மையம், இந்த அனல் மின் நிலையத்துக்கு மாறாக நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.