ஜப்பானின் தலைமை அமைச்சர் ஷிகெரு இஷிபாவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-10-02 17:17:46

ஜப்பானிய தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிகெரு இஷிபாவுக்கு  சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 2ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் வாழ்த்துச் செய்தியில் கூறுகையில்

அண்டை நாடுகளான சீனாவும் ஜப்பானும் அமைதியான சகவாழ்வு, நிரந்தரமான நட்பு, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சி போன்ற வழியில் முன்னேற வேண்டும். இதுவே, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு ஏற்றதாக உள்ளது. ஜப்பான், சீனாவுடன் இணைந்து ஒரே திசையில் முன்னேறி செல்லவும், சீனா-ஜப்பான் இடையே 4 அரசியல் ஆவணங்களில் எட்டப்பட்ட கோட்பாடுகள் மற்றும் ஒத்த கருத்துக்களைக் கடைபிடிக்கவும் வேண்டும் என்றும், அதன் மூலம், புதிய கால ஓட்டத்திற்கு ஏற்ப, ஆக்கப்பூர்வமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சீன-ஜப்பான் உறவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதே நாளில், சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங், ஷிகெரு இஷிபாவுக்கு  அனுப்பிய வாழ்த்து செய்தியில், இரு நாட்டு உறவின் அரசியல் அடிப்படையைப் பேணுக்காத்து, நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை பலப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.