முதல் 9 மாதங்களில் சீனாவில் தங்கத்தின் விலை 24% உயர்வு
2024-10-02 19:59:59

இவ்வாண்டில், ரென்மின்பி மூலம் கணிக்கப்பட்ட தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஷாங்காய் தங்கத்தின் வர்த்தக சந்தை வெளியிட்ட தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில், (99.99தூய்மை)24 காரட் தங்கத்தின் வர்த்தகம் சுறுசுறுப்பாக இருந்து, 24விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 5 ஆண்டுகளில் அதே காலத்தில் ஏற்பட்ட மிக பெரிய அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் அளவு எதிர்பார்த்தப்படி அதிகமாக உள்ளது, மத்திய கிழக்குப் பகுதி நிலைமை பதற்றம் தீவிரமாகியுள்ளது என்ற காரணிகள், தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணங்களாகும்.