குறைந்தது 40 நிறுவனங்களின் போயிங் 737 ரக விமானங்களில் பாதுகாப்பு அபாயம்: அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் எச்சரிக்கை
2024-10-02 18:39:47

குறைபட்சமாக 40 வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனங்களால் இயக்கப்பட்டு வரும் குறிப்பிட்ட போயிங் 737 விமானங்களின் ரட்டர் கட்டுப்பாட்டு அமைப்பில் (rudder control system) கோளாறு காரணமாக பாதுகாப்பு அபாயம் ஏற்பட சாத்தியம் உண்டு என்று அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் செப்டம்பர் 30ஆம் நாள் தெரிவித்தது.

போயிங் விமானத்திற்கு பாகங்களை விநியோகிக்கும் நிறுவனமான கோல்லின்ஸ் ஏரோஸ்பேஸ் ரட்டர் தயாரிப்பில் கோளாறு ஏற்பட்டதை உறுதிச்செய்தது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல், இந்நிறுவனத்திலிருந்து குறைபட்சமாக சிக்கலுடன் கூடிய 353 பாகங்கள் போயிங் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு போயிங் 737 என்.ஜி. மற்றும் 737மாக்ஸ் ரக விமானங்களில் பொருத்தப்பட்டன. இது குறித்து, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் செப்டம்பர் 26ஆம் நாளன்று போயிங் மற்றும் அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.