சீன-ரஷிய தூதாண்மை உறவின் 75ஆவது ஆண்டு நிறைவு குறித்து ஷிச்சின்பிங்கும் புதினும் பரஸ்பர வாழ்த்துக்கள்
2024-10-02 15:32:46

சீனா மற்றும் ரஷியா இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் அக்டோபர் 2ஆம் நாள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஷிச்சின்பிங் தனது வாழ்த்து செய்தியில் கூறுகையில்

சீனா மற்றும் ரஷியா இரண்டும், ஒன்றுக்கொன்று மிகப் பெரிய அண்டை நாடுகளாகும் உலகின் பெரிய நாடுகள் மற்றும் புதிதாக வளரும் முக்கிய சந்தைகளாகவும் விளங்குகின்றன என்று சுட்டிக்காட்டினார். மேலும், சீன-ரஷிய உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிய ஷிச்சின்பிங், 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இரு நாடுகளிடையே அனைத்து துறைகளிலான ஒத்துழைப்பை விரிவாக்க புதினுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

தற்போது, ரஷிய-சீன உறவு வரலாற்றில் மிக உயர்ந்த நிலையில் நிற்கிறது. இரு தரப்புகளும், அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு துறைகளில் முனைப்புடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மேற்கொண்டு, நேர்மையான பல்துருவ உலக ஒழுங்குமுறையை உருவாக்க கூட்டாக பாடுபட்டு வருகின்றன என்று புதின் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டினார்.