© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் 70ஆண்டுகளின் இறுதிகாலம் வரை, கிட்டத்தட்ட தற்சார்பான முழுமையான தொழில்துறை அமைப்பும் தேசிய பொருளாதார அமைப்பும் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, சீனாவின் நவீனமயமாக்கக் கட்டுமானத்துக்கு அடித்தளம் அளிக்கின்றது. 1978ஆம் ஆண்டில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி துவங்கிய பின், சீனாவின் நவீனமயமாக்கம் புதிய வளர்ச்சி காலத்தில் உள்ளது. குறிப்பாக, 2001ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின், பொருளாதார உலகமயமாக்கத்துக்கு வலுவான உத்வேகம் அளிக்கப்பட்டு வருகின்றது. 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பின், சீனாவின் நவீனமயமாக்கம் விரிவாக மேற்கொண்டு வருகின்றது. வறுமை ஒழிப்பு வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத சாதனையை சீனா படைத்து, தொடர்ந்து உயர்ந்த நிலையிலான வெளிநாட்டு திறப்புப் பணியை முன்னேற்றி வருகின்றது. மனிதகுலத்திற்குப் பகிர்வு எதிர்கால சமூகம் என்ற முன்னெடுப்பு, உலகளவில் பெரிய அளவில் பரவலாகி, வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது, நவீனமயமாக்கம் மூலம் நாட்டின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா முயற்சிக்கின்றது.
சீன நவீனமயமாக்கம் முன்னேறி செல்வதுடன், சீனாவின் தனித்துவமான வளர்ச்சி பாதை, வெளியுகத்திற்கு அறிவொளி அளித்தது. கடந்த வளர்ச்சி பாதையை மீளாய்வு செய்ததை பொருத்தவரை, சீனாவின் நவீனயமாக்க கட்டுமானம், வெளிநாட்டு மாதிரியைப் பிரதி எடுத்து அதை செயல்படுத்தவில்லை. மாறாக, சீனாவின் தன் நடைமுறை நிலைமைக்கு ஏற்ப வேரூன்றி நின்று அதை முன்னேற்றி வருகிறது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்புக்கான சின்னமாக உருவாக்கப்பட்டுள்ள ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் போக்குவரத்துக்கு ஒரு ஆண்டு நிறைவு நாள் வெகுவிரைவில் வரவுள்ளது. பரந்த கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், நன்மைகளின் பகிர்வு ஆகிய கோட்பாட்டுகளின்படி, சீனா பிற நாடுகளுடன் கூட்டாக நவீனமயமாக்கத்துக்கு முன்னேறி செல்வதற்கான முன்மாதிரி இது ஆகும். சீனாவின் நவீனமயமாக்கம், வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பகிர்வு செய்யப்படும் முன்னேற்ற போக்கு ஆகும். எதிர்காலத்தில் சீனாவின் நவீனமயமாக்கம், தரமான வளர்ச்சி மற்றும் உயர்ந்த திறப்பு அளவு மூலம், உலகிற்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்.