இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவியது ஈரான்
2024-10-02 15:21:30

படம்:CFP

அக்டோபர் 1-ஆம் நாளிரவு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் தலைமைத் தளபதி ஹோசேயின் சலாமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சிக் காவல் படை வெளியிட்ட அறிக்கையில்,

நீண்டகாலமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட நிலையில், ஹமாஸின் முன்னாள் தலைவர் ஹிஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்ட பின்னர், ஈரான் இந்த முறை தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டது. ஹிஸ்மாயில் ஹனியா, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா, இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் உயர்நிலை தளபதி ஆகியோர் இஸ்ரேலால் கொலை செய்யப்பட்டதற்கு ஈரான் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டு, இஸ்ரேல் மீது ஏவுகணைகளை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி  அக்டோபர் 2ஆம் நாள் சமூக வலைதளத்தில் பதிவிட்டபோது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்று எச்சரித்தார். இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொண்டால், ஈரானின் பதிலடி மேலும் வன்மையாகவும் வலிமையாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.