லெபனான்-இஸ்ரேல் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பவை அவசரக் கூட்டம்
2024-10-03 18:55:36

படம்:XINHUA

மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை அக்டோபர் 2ஆம் நாள் அவசர கூட்டத்தை நடத்தியது. அப்போது, ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் கூறுகையில், லெபனானின் நிலைமை கவலை அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும்,  லெபனானில் முழுப்போரைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது. இல்லையெனில், அது ஆழமான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

லெபனான்-இஸ்ரேல் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டத்தில் சீன தூதர் ஃபு ச்சோங் பேசுகையில்,  தற்போதைய சூழ்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு அவை அவசர நடவடிக்கை எடுக்கவும், தெளிவான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத கோரிக்கைகளை முன்வைக்கும் விதம் ஒற்றுமையுடன் செயல்படவும் வேண்டும் என குறிப்பிட்டார். அதாவது, காசாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு, வன்முறை சுழற்சியை நிறுத்த லெபனான்-இஸ்ரேல் நிலைமையைத் தணிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் போர் பரவலைத் தடுக்க எல்லா முயற்சிகளை மேற்கொள்வதோடு சம்பந்தப்பட்ட தரப்புகள் அரசியல் மற்றும் தூதாண்மை மூலம் தீர்வு காணும் பாதைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.