வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்குச் சீன வெளியுறவு அமைச்சர் ஆறுதல்
2024-10-03 17:22:11

தொடர்ந்து பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய காரணங்களால், நேபாளத்தில் கடும் உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டது குறித்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அக்டோபர் 2ஆம் நாள் நேபாள வெளியுறவு அமைச்சர் அர்சு ரானா டியூபாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இச்சம்பவங்களில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக கூறிய வாங் யீ, நட்புறவு கொண்ட அண்டை நாடுகளான, சீனாவும் நேபாளமும் எப்போதும் இன்பத்துன்பங்கனைப் பகிர்ந்து கொண்டு, ஒன்றுக்கொன்று உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நேபாளத்தின் தேவைக்கிணங்க, பேரிடர் மீட்புப் பணிக்குரிய ஆதரவு மற்றும் உதவிகளை அளிக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.