சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சமூகத்தின் நிலைப்புத்தன்மைக்கான அடிப்படை ஆதாரங்கள்
2024-10-04 17:48:53

கடந்த 75ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நாட்டின் பல்வேறு இன மக்களின் விடா முயற்சியுடன், பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, சமூகத்தின் நீண்டகால நிதானம் என இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். அண்மையில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அளிக்கப்பட்ட விருந்தில், நவ சீனாவின் வளர்ச்சி போக்கைக் குறிப்பிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகளவில், சீனா போன்று 75 ஆண்டுகளில் தேசிய செழுமை மற்றும் மக்களின் இன்ப வாழ்க்கையை நனவாக்கிய நாடுகள் மிகவும் குறைவு. சீனா இந்த சாதனைகளைப் படைத்ததற்கு காரணம் என்ன?இது குறித்து சர்வதேச ஆய்வாளர்கள் பலர், ஜனநாயக அரசியல், நாட்டு ஆட்சிமுறை ஆகிய கண்ணோட்டங்களிலிருந்து பகுப்பாய்வு செய்து யோசித்துள்ளனர். அவ்வாறு யோசிக்கும் போது மக்களை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்ற ஆட்சிமுறை கருத்து முதல், முழு செயல்முறை மக்கள் ஜனநாயகம் என்ற அமைப்புமுறை வரை, சீனா வளர்ந்து முன்னேற்றம் அடைவதற்கான ஆழ்ந்த நிலையிலான தர்க்கத்தை அவர்கள் அறிந்து கொண்டனர். சீன ஜனநாயக அரசியலின் நடைமுறை அனுபவம், உலகிற்கு அறிவொளியை கொண்டு வந்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் என்பது, ஜனநாயகத்தை ஊக்குவித்தல், பரந்த அளவில் கருத்துக்களைக் கேட்டறிதல் ஆகியவற்றை நனவாக்கும் முன்மாதிரியாக உள்ளது. விரிவான முறையில் கள ஆய்வு செய்வது முதல், அரசு வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் ஆதாரங்களை நிரூபிப்பது என்பது வரை, கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் பரந்த அளவில் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். பின்னர், கலந்தாய்வு கூட்டங்களில் பங்கெடுத்த பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு இணங்க திருத்தம் செய்யப்பட்டு, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முக்கிய தீர்மானங்களும், ஒழுங்குமுறை மூலம் ஜனநாயக ரீதியான விவாதத்துக்குப் பின், அறிவியல் வழிமுறையில் நிறைவேற்றப்பட்டவை என்பதைக் காணலாம். இதன் மூலம், மிகப் பெரிய அளவிலான மக்களின் நலன்கள் பேணிக்காக்கப்படுகின்றன.