லெபனான் அப்பாவி மக்களின் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளப்பட முடியாது: குட்ரைஸ்
2024-10-05 18:55:00

லெபனானின் பெய்ரூட் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவதாக ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரைஸ் அக்டோபர் 4ஆம் நாள் செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். லெபனானின் மீது இஸ்ரேல் தொடுத்த வான் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு “முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்புகள் எந்த நேரத்திலும் அப்பாவி மக்கள் மற்றும் சிவில் அடிப்படை வசதிகளை இயன்ற அளவில் பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பாவி மக்கள் எப்போதுமே பாதிக்கப்படாமல் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் குட்ரைஸ் வேண்டுகோள் விடுத்தார்.

அதிகரித்து வரும் மனித நேய தேவையை நிறைவு செய்யும் வகையில் ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள், லெபனான் அரசுடன் நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.