லெபனான் ஹிஸ்புல்லா கட்சியின் தொலைத்தொடர்பு இணையப் பொறுப்பாளர் உயிரிழந்தார்
2024-10-05 17:08:47

இஸ்ரேல் படை ஆக்டோபர் 3ஆம் நாள் தொடுத்த வான் தாக்குதலில், லெபனான் ஹிஸ்புல்லா கட்சியின் தொலைத்தொடர்பு இணையப் பொறுப்பாளர் முகமது ரஷீத் சகாஃபி உயிரிழந்தார் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்புபடை 4ஆம் நாள் தெரிவித்தது.

லெபனானின் தென் பகுதியின் எல்லை பிரதேசத்திலுள்ள ஹிஸ்புல்லா கட்சியைச் சேர்ந்தவர்களின் மீது இஸ்ரேல் செப்டம்பர் 30ஆம் நாள் முதல் மேற்கொண்ட தரை நடவடிக்கைகளில் 21 இராணுவ ஆணையாளர்களை அடங்கிய சுமார் 250 உறுப்பினர்கள் உயிரிழந்தனர் என்று இஸ்ரேல் படை 4ஆம் நாள் தெரிவித்தது.

மேலும், கடந்த 24 மணிநேரத்துக்குள், லெபனானின் பல இடங்களின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்தனர். 151 பேர் காயமுற்றனர் என்று லெபனானின் பொது சுகாதார அமைப்பு 4ஆம் நாள் விடியற்காலை தெரிவித்தது.