இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது
2024-10-05 16:35:55

இவ்வாண்டின் நவம்பர் 14ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இலங்கை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அக்டோபர் 4 முதல் 11 ஆம் நாள் நண்பகல் வரை, இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் அலுவலகங்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ரத்நாயக்க தெரிவித்தார்.

225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இலங்கையின் நாடாளுமன்றத்தில், 196 பேர் நேரடி வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் மீதமுள்ள 29 பேர், நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு பெறும் வாக்குகளின் விகிதத்தின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.

இலங்கையின் முந்தைய  நாடாளுமன்றத் தேர்தல்,கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.