மத்திய கிழக்கு நிலைமை குறித்து எகிப்து மற்றும் செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர்கள் விவாதம்
2024-10-05 19:03:09

எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்தேல் அட்டி அக்டோபர் 4ஆம் நாள் செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசலுடன் தொலைபேசி மூலம் மேற்கொண்டு லெபனான் நிலைமையும் மத்திய கிழக்குப் பகுதியின் சூழ்நிலையைத் தீவிரமாக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையும் குறித்து விவாதித்தார்.

லெபனானின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலை அப்தேல் அட்டியும் ஃபைசேலும் கண்டித்தனர் என்றும், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களின் மீதான இஸ்ரேலின் தாக்குதலினால் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைச் சமாளிக்கும் வகையில் எகிப்தும் செளதி அரேபியாவும் தொடர்ந்து ஒருங்கிணைப்பு மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் எகிப்து வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மக்களுக்கு அனைத்து மனித நேய உதவிகளையும் வழங்குவது அவசரமானது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய தரப்புகள் ஐ.நா பாதுகாப்பவையின் 1701வது இலக்க தீர்மானத்தை பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுப்பதாகவும், லெபனான் மற்றும் காசா பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை உடனடியாக நனவாக்குவதைத் தூண்டுவதற்கு சர்வதேச சமூகம் குறிப்பாக ஐ.நா பாதுகாப்பவை பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.