அமைதியான வளர்ச்சி கொண்ட நவீனமயமாக்கப் பாதையில் முன்னேறி வருகின்ற சீனா
2024-10-05 17:01:45

நவ சீனா நிறுவப்பட்ட 75 ஆண்டுகளாக, தற்சார்ப்பு வாய்ந்த அமைதியான தூதாண்மை கொள்கையில் ஊன்றி நின்று, பஞ்ச சீல கோட்பாடுகளைப் பின்பற்றி, அமைதியான வளர்ச்சி கொண்ட நவீனமயமாக்கப் பாதையில் முன்னேறி வருகிறது.

தற்போது, புவியமைவு அரசியல் மோதல்கள் தொடர்கின்றன. உலக வளர்ச்சி பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. சர்வதேச ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில், மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் என்ற முன்மொழிவைச் சீனா முன்வைத்துள்ளது. பல்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கு இது வழிக்காட்டியுள்ளது என்று பிரேசில் முன்னாள் அரசுத் தலைவர் தில்மா ரூசெஃப் அம்மையார் தெரிவித்தார்.

கடந்த 75 ஆண்டுகளாக, எந்த ஒரு போர் அல்லது மோதலையும் சீனா தொடுக்கவில்லை. சீனா முன்வைத்த பஞ்ச சீல கோட்பாடுகள், சர்வதேச உறவு மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடாகவும் மாறியுள்ளது. அத்துடன், முக்கியமான சர்வதேச பிரச்சினைகளுக்கான தீர்வில் சீனா ஆக்கமுடன் பங்கெடுத்துள்ளது.

அமைதியானது, வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும். வளர்ச்சியானது, அமைதியின் அடிப்படையாகும். கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதனால் தான், மோதல்களை நீக்க முடியும். சீனா இதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, உலகத்தின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு வலிமையான இயக்காற்றலை ஊட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 150க்கும் மேலான நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய 200க்கும் மேலான ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனா கையொப்பமிட்டது.

அமைதியைப் பேணிக்காப்பதற்கும், வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், நேர்மையான மற்றும் நியாயமான சர்வதேச ஒழுங்கு தேவையாகும். பலதரப்பு நிலைமையில், வளரும் நாடுகளுக்கு சீனா எப்போதும் ஆதரவு மற்றும் உதவியளித்து வருகிறது. சர்வதேச மேடையில், தெற்கு நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமை உயர்ந்து வருகிறது.

எதிர்காலத்தில், அமைதியான வளர்ச்சியில் ஊன்றி நிற்பது என்ற சீனாவின் மனவுறுதி மாறாது. பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்வது என்ற சீனாவின் மனவுறுதி மாறாது. உலகத்தின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற சீனாவின் மனவுறுதி மாறாது.