© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இஸ்ரேலின் எந்த தாக்குதலுக்கும் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ட்சி அக்டோபர் 5ஆம் நாள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் தெரிவித்தார்.
சிரியாவில் ஒரு நாள் நீடித்த பயணத்தை முடித்து கொண்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இஸ்ரேலை உறுதியுடன் “எதிர்த்து போராடுவது” என்ற ஈரானின் வாக்குறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
காசா பகுதி மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்தை நனவாக்கி, வீடுவாசலின்றி அல்லல்படும் மக்களுக்கு உதவுவது அவசர கடமையாகும். சிரியாவில் தஞ்சம் புகுந்த லெபனான் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சிரியாவுக்கு மனித நேய உதவிகளை ஈரான் வழங்கியுள்ளது. மேலதிக உதவிப் பொருட்கள் சிரியாவுக்கு விரைவில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.