சீன-ஐரோப்பிய ஒன்றிய மின்சார வாகன வர்த்தக சர்ச்சை குறித்து சீனத் தொழில் மற்றும் வணிக துறையினரின் விருப்பம்
2024-10-06 18:38:05

மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு பற்றிய இறுதியான தீர்ப்பு வரைவை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அக்டோபர் 4ஆம் நாள் வாக்களிப்பு மூலம் ஏற்றுக்கொண்டது குறித்து சர்வதேச வர்த்தக முன்னேற்றத்திற்கான சீன கவுனிசிலின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சீனாவின் தொழில் மற்றும் வணிக துறையினர்கள் இச்சம்பவத்தில் பெரும் கவனம் செலுத்தி, தெளிவான நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளனர். அதாவது, மின்சார வாகனத் துறையில் சீன-ஐரோப்பிய ஒத்துழைப்புக்கான சீரான போக்கினை ஐரோப்பியத் தரப்பு பொருட்படுத்தாமல் இருப்பதை சீனா உறுதியுடன் எகிர்க்கிறது. தொடர்புடைய உண்மைகள் மற்றும் புலனாய்வு விதிகளைப் பொருட்படுத்தாமல், தவறான தீர்ப்பை திருத்துவதை ஐரோப்பியத் தரப்பு மறுப்பதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. சீன மின்சார வாகனங்களின் மீது ஐரோப்பிய தரப்பு சலுகைக்கு எதிரான கூடுதல் வரி வசூலிப்பதைச் சீனா உறுதியுடன் எதிர்க்கிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில் சீனாவின் மின்சார வாகனத் துறையும், தொழில் நிறுவனங்களும் மிக பெரிய நல்லெண்ணத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் புலனாய்வுடன் ஒத்துழைப்பில் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. விலை வாக்குறுதி உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், உலக வர்த்தக அமைப்பின் விதியின் கீழ் சீன-ஐரோப்பிய மின்சார வாகன வர்த்தக சர்ச்சையை உரிய முறையில் தீர்க்க வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதாக கூறினார்.