© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
IMF-ஆதரவு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான தேதியை நிர்ணயிக்க, இலங்கையின் பொருளாதாரக் குழுவுடன் நெருங்கிய தொடர்பைத் தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் குழு, இலங்கையின் அரசுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தலைமை அமைச்சர் ஹரினி அமரசூரிய மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்தித்து உரையாடினார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி சவால்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக கிருஷ்ணா சீனிவாசன் கூறினார்.
இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.