எகிப்தின் சூயஸ் கால்வாய் வருமானம் குறைந்துள்ளது
2024-10-07 19:46:31

2024ஆம் ஆண்டின் துவக்கம் முதல் தற்போது வரை எகிப்தின் சூயஸ் கால்வாயின் வருமானம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 60 விழுக்காடு குறைந்தது. சூயஸ் கால்வாய் வழியாக சென்று வந்த கப்பல்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 49 விழுக்காடு குறைந்தது என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தற்போது செங்கடல் பகுதியின் சூழ்நிலை பதற்றமாக இருப்பது, முன்பு கண்டிராத அறைகூவலைச் சந்திக்கிறது. இந்நிலையில் சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக உள்ள கப்பல் போக்குவரத்து வழிகளை கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் நாடி வருகின்றன. உலக வர்த்தகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும் விதம், சூயஸ் கால்வாய் நிர்வாகம், சர்வதேச கடல் விவகார வாரியம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் தற்போதைய நெருக்கடி பற்றி விவாதித்து, இதைச் சமாளிப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது என்று இந்நிர்வாகத்தின் தலைவர் இவ்வறிக்கையில் தெரிவித்தார்.

சூயஸ் கால்வாயின் வருமானம் 2022 முதல் 2023ஆம் நிதி ஆண்டில் இருந்த 940 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 2023 முதல் 2024ஆம் நிதி ஆண்டில் இருந்த 720 கோடி அமெரிக்க டாலர் வரை பெருமளவில் குறைந்தது என்று இந்நிர்வாகம் தெரிவித்தது.