கடந்த 9 மாதங்களில் இலங்கையின் சுற்றுலா வருவாய் 61 சதவீதம் அதிகரிப்பு
2024-10-07 17:15:35

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் சுற்றுலா வருவாய் 2023 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 61 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இலங்கையின் சுற்றுலா வருவாய் 2.35 பில்லியன் டாலர்களாகும்.  கடந்த ஆண்டின் இதே காலத்தில் சுற்றுலா வருவாய் 1.46 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்.

2024 ஆம் ஆண்டின் செப்டம்பரில் மட்டும் சுற்றுலா மூலம் 181 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை  ஈட்டியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் செப்டம்பரில் 152 மில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 1.48 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருவதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.