© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தொழில் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த வாகன அணி, அக்டோபர் 6ஆம் நாளிரவு பாகிஸ்தானின் தென் பகுதியிலுள்ள கராச்சி நகரில் பயங்கரத் தாக்குதலுக்குள்ளானது. இதில் 2 சீனர்கள் உயிரிழந்தனர். ஒரு சீனர் காயமுற்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமுற்றுள்ளதாகவும் பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தப் பயங்கரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதலில் உயிரிழந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமுற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் அவசரப் பணியை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பு காயமுற்றோர்களுக்கு முழு மூச்சுடன் சிகிச்சை வழங்கி, இத்தாக்குதலின் மீது புலனாய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.