© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் அக்டோபர் 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
ஒட்டுமொத்தளவில், மேலும் சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலை எதிர்நோக்கி உள்ள நிலையில், சீனப் பொருளாதாரம் நிதானமாக இயங்கி முன்னேறி வருகிறது. புதிய உயர் தர உற்பத்தி ஆற்றல் விரைவாக வளர்ந்து, உயர் தரமுள்ள வளர்ச்சி மேலும் ஆழமாக முன்னேறி வருகிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சென்சான்ஜெய் தெரிவித்தார்.
வளர்ச்சி முன்னேற்றப் போக்கின்படி, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை நிலைமை மாறவில்லை. சந்தையின் பெரியளவும் வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றலும் மாறவில்லை. சீனா இவ்வாண்டின் முழு நோக்குகளை நனவாக்குவதில் நம்பிக்கையாக உள்ளது. பொருளாதாரத்தின் நிதானமான, சீரான வளர்ச்சி குறித்தும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.