செப்டம்பரில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி குறியீடு: 52.4%
2024-10-08 11:14:04

செப்டம்பரில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் அக்டோபர் 8ஆம் நாள் வெளியிட்டது. இதன்படி, செப்டம்பரில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி குறியீடு 52.4 விழுக்காடாகும். இது, ஆகஸ்ட் திங்களில் இருந்ததை விட 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.

இந்த குறியீடு பெரிதும் மீட்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோக சங்கிலி தொடர்ந்து சுறுச்சுறுப்பாக வளர்ந்து வருகிறது. நெடுஞ்சாலை, ரெயில், விமானம், இணைய வணிகம் முதலிய சரக்குப் போக்குவரத்து அளவு நிதானமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.