காசா மோதல் குறித்து சீனா கருத்து
2024-10-08 19:56:05

2024ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள், காசா பகுதியில் மோதல் மூண்ட ஓராண்டு நிறைவாகும். தற்போது மோதல் இன்னமும் தொடர்கிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் அக்டோபர் 8ஆம் நாள் கூறுகையில், ராணுவம் மற்றும் வன்முறை, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறை அல்ல. அமைதி மற்றும் நிலைத்தன்மையை நனவாக்குவதை இது மேலும் கடினமாக்கும் என்பதை கொடிய உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், காசாவில் நிகழ்ந்த மோதலில் இருந்து விடுபடுவது குறித்து சீனா மூன்று முன்மொழிவுகளை முன்வைத்தது. அதாவது, போர் நிறுத்தமும் மனித நேய மீட்புதவியும் தற்போதைய அவசர கடமையாகும். “பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்தை நிர்வகிப்பது”, காசாவில் போருக்கு பிந்தைய புனரமைப்பின் அடிப்படை கோட்பாடாகும். “இரு நாடுகள் திட்டம்” எதிர்காலத்தின் அடிப்படை வழியாகும் என்று தெரிவித்தார்.

சூழ்நிலை தணிவடைவதை முன்னேற்றும் அடிப்படையில் சர்வதேச சமூகம் மேலும் பெரிய அளவிலான, மேலதிக அதிகாரமும் பயனும் பெற்ற சர்வதேச கூட்டத்தை நடத்தி, “இரு நாடுகள் திட்டத்தைச்” செயல்படுத்தும் நிகழ்ச்சி நிரல் மற்றும் வரைபடத்தை வகுக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் அமைதியாக சகவாழ்வு மேற்கொள்வதும், அரபு மற்றும் யூதர் ஆகிய இரு இனங்கள் இணக்கமாக சகவாழ்வதும் இறுதியில் நனவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.