சீனத் துணைத் தலைமையமைச்சர் ஷின்ஜியாங்கில் ஆய்வு பயணம்
2024-10-08 09:55:37

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், அரசவை துணைத் தலைமை அமைச்சரும், மத்திய பிரதிநிதி குழு தலைவருமான ஹெ லீ ஃபாங், பிரதிநிதி குழு உறுப்பினர்கள் ஆகியோர் அக்டோபர் 7ம் நாள் மாலை, சீனாவின் ஷின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் ஷி ஹே ட்ச நகரிலுள்ள ஷின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானக் குழுமத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டனர்.

அப்போது ஹெ லீ ஃபாங் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய அறிவுரைகளை நினைவில் வைத்து, குழுமத்தின் எழுச்சியை வெளிகொணர்ந்து, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஷின்ஜியாங் வளர்ச்சியில் ஊன்றி நின்று, மேலதிக புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் புதிய ரக தொழில்மயமாக்க வளர்ச்சி நிலைமையை ஹெ லீ ஃபாங் கேட்டறிந்தார். புத்தாக்கத்தை உந்து சக்தியாகக் கொண்டு, உள்ளூரின் நிலைமைக்கிணங்க, புதிய உயர்தர உற்பத்தித் திறனை வளர்த்து, உயர் நிலை, நுண்மதிமயமாக்கம், பசுமைமயமாக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னெடுப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.