தைவானுக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2024-10-09 15:08:26

சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு சுமார் 56.7 கோடி டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை வழங்குவதற்கு அமெரிக்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ ஜியேன் கூறுகையில், சீனாவின் உறுதியான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவான் பிரதேசத்துக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா, ஒரே சீனா கொள்கை மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளைக் கடுமையாக மீறியுள்ளது. அமெரிக்காவின் செயல், சீன இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கும், தைவான் நீரிணை அமைதி மற்றும் நிதானத்துக்கும் கடும் தீங்கு விளைவித்துள்ளது. சீனா, இதற்குக் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதை நிறுத்தி, இரு நாடுகள் மற்றும் இரு தரப்பு படைகளின் உறவுக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.