சீன-ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு
2024-10-09 20:03:59

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அக்டோபர் 9ஆம் நாள், ஜப்பானின் புதிய வெளியுறவு அமைச்சர் இவாயாதாகேஷியுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

இவாயாதாகேஷி கூறுகையில், ஜப்பானிய-சீனப் பன்முக நெடுநோக்கு உறவை பெரிதும் முன்னேற்றி, பயனுள்ள மற்றும் நிதானமான இரு தரப்புறவின் உருவாக்கத்துக்கு முயற்சி மேற்கொள்ள ஜப்பானிய புதிய அமைச்சரவை விரும்புகிறது. இரு நாட்டுப் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளுக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. சீனாவுடன் பல்வேறு நிலையிலான தொடர்பை வலுப்படுத்தி, தீர்க்கப்படாத பிரச்சினைகளை கலந்தாய்வின் மூலம் தீர்த்து, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்க ஜப்பான் விரும்புகிறது என்றார்.

வாங்யீ கூறுகையில், பரஸ்பர நலனுடன் கூடிய ஒத்துழைப்பும், கூட்டு வளர்ச்சியும், இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தின. இரு தரப்பும், வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு, ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, சீன-ஜப்பானிய நெடுநோக்கு உறவைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, புதிய யுகத்தின் கோரிக்கைக்குப் பொருந்திய இரு தரப்புறவை உருவாக்க வேண்டும் என்றார்.