சர்வதேச நிதிக் கட்டமைப்புச் சீர்திருத்தத்தை விரைவுப்படுத்த சீனா வேண்டுகோள்
2024-10-09 15:00:37

79ஆவது ஐ.நா பொது பேரவையின் 2ஆவது கமிட்டி(பொருளாதாரம் மற்றும் நிதிக் கமிட்டி) 8ஆம் நாள் பொது விவாத கூட்டத்தை நடத்தியது. ஐ.நாவுக்கான சீனாவின் துணைப் பிரதிநிதி தைபிங் அதில் உரை நிகழ்த்துகையில், உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும். கூட்டுக் கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம் மற்றும் கூட்டு பகிர்வு என்ற உலக மேலாண்மைக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச விவகாரங்களில் ஐ.நா மைய பங்காற்றுவதற்கு ஆதரவளிக்க வேண்டும். சர்வதேச நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டும். வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனப் பாணி நவீனமயமாக்கலைச் சீனா தொடர்ந்து உறுதியாக முன்னேற்றி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பன்முங்களிலும் ஆழமாக்கும். மேலும், உயர் நிலையான வெளிநாட்டு திறப்புப் பணியை விரிவாக்கி “உலகின் தெற்கு” வளர்ச்சிக்குப் புதிய உந்து ஆற்றலை வழங்கி உலக வளர்ச்சிக்கான பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதை முன்னேற்றும் என்றும் தைபிங் கூறினார்.