பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம்
2024-10-09 16:31:21

அக்டோபர் 6ஆம் நாள் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரண்டு சீன மக்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர். இது குறித்து ஐ.நா.பாதுகாப்பவை அக்டோபர் 8ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் மிகுந்த கண்டனம் தெரிவித்தது.

ஐ.நா.பாதுகாப்பவையின் உறுப்பினர் ஒருவர் மீண்டும் கூறுகையில், அனைத்து வகையான பயங்கரவாதமும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களின் குற்றவாளிகள், அமைப்பாளர்கள், நிதியளிப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றார்.