ரஷ்யாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பினராகும் உரிமையை இலங்கை வலியுறுத்தும்
2024-10-09 18:58:47

ரஷ்யாவில் இம்மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் இலங்கை உறுப்பினராகும் கோரிக்கையை வலியுறுத்த இருப்பதாக இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் விஜித ஹேராத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22 முதல் 24 ஆம் நாள் வரை பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ரஷ்யா நடத்துகிறது, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரசுத் தலைவர் அநுர குமார திஸா நாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு கடமைகள் காரணமாக அவர் பங்கேற்க முடியாது என்று ஹேராத் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்கும், வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு  பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராகுவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை விடுக்கும் என்று ஹேரத் கூறினார்.

தொடர்ந்து அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் விரைவில்  சந்தித்து ஆதரவை திரட்ட இலங்கை திட்டமிட்டுள்ளது என்று ஹேரத் கூறினார்.