சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டி நிரந்தரக் குழுவின் 9ஆவது கூட்டம்
2024-10-10 10:28:28

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டி நிரந்தரக் குழுவின் 9ஆவது கூட்டம் அக்டோபர் 9ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய முக்கிய உரையின் எழுச்சியை ஆழமாக ஆய்வு செய்து செயல்படுத்துவது என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும்.

"பண்பாட்டு தன்னம்பிக்கை மற்றும் சுய வலிமையை முன்னேற்றி, சோசலிசப் பண்பாட்டுப் புதிய சாதனைகளை உருவாக்குவது" பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலந்தாய்வு மேற்கொண்டனர்.  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் ஹுனிங் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

அழைப்பின் பேரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் தலைவருமான லி ஷுலே இத்துவக்க விழாவில் கலந்து கொண்டு அறிக்கையை வழங்கினார். அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, தோழர் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி, பண்பாட்டுக் கட்டுமானத்திற்கு பெரும் முக்கியத்துவத்தை அளித்து, கருத்துக்கள் மற்றும் பண்பாட்டுப் பணிகளை முன்னேற்றி, வரலாற்று சாதனைகளைப் பெற்று, வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார்.