இலங்கையின் பொருளாதாரம் 4.4 சதவீதமாக வளரும்: உலக வங்கி
2024-10-11 17:14:07

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முந்தைய கணிப்புகளை விஞ்சியுள்ளதாக உலக வங்கி அண்மையில் தெரிவித்துள்ளது.

உலக வங்கி ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் "எதிர்காலத்தை திறத்தல்" என்ற தலைப்பிலான இலங்கையின் வளர்ச்சி அறிக்கையில் நாட்டின் பொருளதார மீட்சி பலவீனமாக உள்ளது என்று எச்சரித்தது.

உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கை ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்பை கொண்டுள்ளது.இது மேலதிகமாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், உற்பத்தி, சேவைகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் ஏற்றுமதியை பல்வகைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று உலக வங்கி மேலும் தெரிவித்தது.