சீன மற்றும் ஜப்பான் தலைமையமைச்சர்களின் சந்திப்பு
2024-10-11 10:21:29

அக்டோபர் 10ஆம் நாள் லாவோஸின் தலைநகரான வியண்டியனில் கிழக்காசிய ஒத்துழைப்புத் தலைவர்களின் தொடர் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜப்பான் தலைமையமைச்சர் ஷிபா ஷிகெருவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய லீ ச்சியாங்,  சீனா மற்றும் ஜப்பானின் வளர்ச்சி ஒன்றுக்கு ஒன்று முக்கியமான வாய்ப்பாகுமே தவிர அறைகூவல் அல்ல என்றார். சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான நான்கு அரசியல் ஆவணங்கள், கோட்பாடு மற்றும் ஒத்த கருத்துக்களை ஜப்பான் உண்மையில் பின்பற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இரு தரப்புகளின் உறவைச் சரியான திசையை நோக்கி வளர்த்து, இரு நாட்டு உறவின் அரசியல் அடிப்படையைப் பேணிக்காத்து, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை இடைவிடாமல் வலுப்படுத்தி, இருநாட்டு நெடுநோக்கு மற்றும் ஒன்றுக்கு ஒன்று சலுகை கொண்ட உறவைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, புதிய காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆக்கபூர்வமான மற்றும் நிலையான சீன-ஜப்பான் உறவை உருவாக்க சீனா பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.