19வது கிழக்காசிய உச்சிமாநாடு துவக்கம்
2024-10-11 17:35:00

19வது கிழக்காசிய உச்சிமாநாடு அக்டோபர் 11ஆம் நாள் முற்பகல் லாவோஸ் தலைநகர் வியென்டியானில் நடைபெற்றது. ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரிப்பது, ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளிப்பது உள்ளிட்ட அம்சங்களும், பிரதேச மற்றும் சர்வதேச விவகாரங்களும் குறித்து, இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

லாவோஸ் தலைமையமைச்சர் சோனெக்சே சிஃபாண்டோன் இந்த உச்சிமாநாட்டுக்குத் தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், கடந்த 19 ஆண்டுகளாக, கிழக்காசிய உச்சிமாநாட்டு ஒத்துழைப்பு முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது. மாறி வருகின்ற புவியமைவு அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில், கிழக்காசிய உச்சிமாநாட்டின் கட்டுப்போப்புக்குள்ளான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என்றார்.

10 ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.