19ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் பங்கெடுப்பு
2024-10-11 18:54:38

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அக்டோபர் 11ஆம் நாள் லாவோஸின் வியன்தியான் நகரில் நடைபெற்ற 19ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கெடுத்தார்.

இம்மாநாட்டில் அவர் கூறுகையில், தற்போது உலகம் புதிய பதற்றம் மற்றும் சீர்திருத்த காலத்தில் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு இயக்காற்றல் போதுமானதாக இல்லை. இவ்வாண்டு பஞ்ச சீலக் கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். மாற்றமும் பதற்றமும் கூட்டாக நிலவும் உலகில், சமமாக அணுகுவது, ஒன்றுக்கொன்று மதிப்பும் நலனும் அளிப்பது, நிலைத்தன்மையைக் கூட்டாக முன்னேற்றுவது ஆகியவற்றில் ஊன்றி நிற்பது, ஆசியாவின் வேகமான வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றி, ஒத்த கருத்தை மேலும் சீராக திரட்டி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை ஆழமாக்கி, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரதேச மற்றும் உலகின் மேலும் ஒளிவீசும் எதிர்காலத்தைக் கூட்டாக திறந்து வைக்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.