தைவான் சுதந்திர சக்தி: குழப்பத்திற்கு ஊற்றுமூலம்
2024-10-12 09:49:37

சீன தைவான் தலைவரான லய் ட்சிங் தே அக்டோபர் 10ஆம் நாள் தைவான் நீரிணை இரு கரை பிரதேசம் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டார். தைவான் நீரிணை இரு கரை ஒன்றை ஒன்று சார்ந்தது இல்லை என்ற புதிய இரு நாட்டு கருத்தை அவர் தெரிவித்தார். தைவான் சுதந்திர சக்தியின் பிரிவினையை பரவல் செய்து, இரு கரையின் பகைமையை அவர் தூண்டிவிட்டார்.

லய் ட்சிங் தே இது போன்ற தவறான கருத்துகளை வெளியிடுவது, தைவான் நீரிணை இரு கரை, ஒரே சீனாவைச் சேர்ந்தவை மற்றும் தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகும் என்ற உண்மையை இது மாற்றப்போவதில்லை. 1943ஆம் ஆண்டின் கெய்ரோ அறிக்கை, 1945ஆம் போட்ஸ்டாம் அறிக்கை ஆகியவற்றின்படி, சீனாவின் உரிமை பிரதேசமான தைவான்,  சீனாவுடன் திரும்ப இணைய வேண்டும். 53 ஆண்டுகளுக்கு முன்பு, 26ஆவது ஐ.நா பொது பேரவையில் முழு பெரும்பான்மை வாக்கெடுப்புகளின் மூலம் 2758ரகம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஐ.நாவில் சீன மக்கள் குடியரசின் அனைத்து உரிமைகளும் மீட்சியடைந்துள்ளது.

தைவானின் எதிர்காலம், தாய்நாட்டின் ஒருமைப்பாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையது. தைவான் மாநிலத்தின் சகநாட்டவர்களின் நன்மை, சீனத் தேசத்தின் மறுமலச்சியுடன் தொடர்பு உள்ளது. தாய்நாட்டின் முழுமையான ஒன்றிணைப்பை நனவாக்கும் வரலாற்று முன்னேற்றப் போக்கை எந்த தனிநபரோ சக்தியோ மாற்ற முடியாது என்பது திண்ணம்.