ஈரான்: விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை
2024-10-13 19:49:31

விமானங்களில் கைப்பேசி தவிர, வேறு எந்த மின்னணு தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஈரான் பயணியர் விமானப் போக்குவரக்கு அமைப்பு அண்மையில் தெரிவித்தது. விமானப் பயணப் பாதுகாப்புக் காரணமாக,  கைப்பேசி தவிர, பேஜர்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விமானங்களுக்குள் கொண்டு செல்லப்பட தடை செய்யப்பட்டுள்ளது என்று இவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், லெபனானில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஆகிய தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்து சிதறிய சம்பவங்களில், 37 பேர் உயிரிழந்தனர். 2931 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.