மோசமான வானிலையின் காரணமாக இலங்கையில் சுமார் 20ஆயிரம் பேருக்கு பாதிப்பு
2024-10-13 19:31:24

அண்மையில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு உள்ளிட்ட சீற்றங்களால், தற்போது வரை இலங்கையில் 24492பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் 12ஆம் நாள் தெரிவித்தது.

தற்போது, 584 குடும்பங்களைச் சேர்ந்த 2200பேர் 23 நிவாரண மைங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசுத் தலைவர் செய்தி அலுவலகம் அதே நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அரசுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க தொடர்புடைய வாரியங்களை மீட்புப் பணிக்கு ஆதரவு அளிக்கவும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.